உள்ளம் எல்லாம் ஒன்றுதான் - இராஜ்குமார்

உள்ளம் என்பது ஒன்றுதான்
==========================
அந்த குழந்தை பிறப்பு முதலே
குறையன்பில் குளித்தது
உறக்கம் உள்ளேதான்
விளையாட்டெல்லாம் வெளியே தான்
அவள் என்னோடு இருப்பதில்லை
அவர் எனைதிட்ட மறக்கவில்லை
உறவுக்கு ஒரு கோணம் நான்
பிறருக்கு ஒரு தேகம் தான்
என்னழகை ரசிக்க யாரிங்கே
என்விழியை முறைக்க பலரிங்கே
வெறுத்து ஒதுக்க சிலரிங்கே
குழந்தையை கொஞ்ச நானிங்கே
குடும்பத்தால் படிப்பை தொடணும்
தெரு தெருவாய் வேலை தேடணும்
நிலைக்கு அதிக பணமாய் தரணும்
குடும்ப நிலையை தூக்கி விடணும்
தம்பி தங்கை விருப்பம் முடிக்கணும்
அம்மா அப்பா ஆசை கேக்கணும்
வீட்டை ஒன்னு கட்டி பாக்கணும்
உறவை அதற்குள் அழகு பார்க்கணும்
இத்தனை தேடல் முப்பது வருடம்
உடைந்த தேகத்தை வீழாமல்
விழிக்குள் வைத்தது நட்பு மட்டுமே
திரும்பி பார்த்தால் எல்லாம் வெறுப்பே
நானே சமைத்து நானே உண்ண
தனிமை தினமும் துரத்தி கொல்ல
வீட்டிலிருந்தது விரல் விடும் நாளாய்
கனவுகளெல்லாம் சுடர் விடும் தீயாய்
காதலை காண அழகு நேரமில்லை
உண்மை காதலால் நான் மீளவில்லை
அன்பை அளிக்க எனக்கு அவளுமில்லை
என் கண்ணீர் துடைக்க தெரியவில்லை
எந்த வயதில் வெளியே சென்றேன்
முப்பது வயதிலும் வெளியே தான் இருக்கிறேன்
அன்பை தேடிய நாளிலும் எனக்கில்லை
என்னன்பை வழங்க அருகே யாருமில்லை
நட்பு மட்டுமே நகராமல்
தோள் கொடுக்குது தளராமல்
புலம்பி தீர்க்க வழியில்லை
ஆணின் கண்ணீருக்கு மதிப்பில்லை
வெறுத்து பேசும் உள்ளங்களே
ஆணின் உள்ளம் பாருங்களேன்
உருவ தேகம் வேறுதான்
உள்ளம் எல்லாம் ஒன்றுதான் ..!!!
- இராஜ்குமார்