இறவாக்காதலின் மரணம்

..."" இறவாக்காதலின் மரணம் ""...

தளிர் இலைகளில் தூங்குகின்ற
பனித்துளியும் தன் இதழ் விரிய
துடிக்கும் சிறு மொட்டுக்களும்
சிறகுகள் விரித்தே தேன்சிட்டும்
விடியலை நோக்கி காத்திருக்கும்
தூக்கமில்லாத துக்கத்தோடே
இரவு விடைசொல்ல இமைகள்
தடை சொல்லி தாழ்ப்பாள்போட
உந்தன் நினைவுகளுடன் நீந்த
அன்பு காதலியே நீ காயங்கள்
தருவதில் நேர்த்தியறிந்தவள்
கொதிக்கும் இரும்பு கூலாய்
கொப்பளிக்கும் வார்த்தைகள்
காதலை உன்னில் விதைக்க
விருச்சம் முளைத்தது ஏனோ
வேறிடம் எந்தன் விழியோரம்
வழிகின்ற நீரூற்றியே காதலை
பாங்காய் நீ வளர்த்தெடுத்தாய்
உயிர்போகும் வலிகூட அறியேனடி
புன்னகை வருடலிலே துடித்தேனடி
உனக்கே உனக்காய் என்னிடம்
இருப்பது மெய்யான மெய் சுமக்கும்
பிரிந்துவிட்டால் மீண்டு வராதந்த
என் இ(உ)ன்னுயிர் மட்டுமே,,,,

என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (23-Sep-14, 1:08 pm)
பார்வை : 80

மேலே