இயற்கையை நேசி இருப்பதை பூசி
வண்ண வண்ண விளக்கடி
வாழ்வு தந்த பரிசடி....
எண்ண சோதி கண்டு
எங்கும் பரந்த சோதி தந்து
பூமி பந்தை பசுமையாக்க
தன் வாழ்வை எரிக்கும் ரவியடி !!
கண்ணுக்கு குளிர்ச்சியாக
காணும் இரவை மலர்ச்சியாக்க
வானில் தோன்றும் நிலவடி
ஞாயிறு தந்த மறு உருவமடி !
முந்திசெய்த வினையகற்ற
பந்தி வைக்கும் விண்மீன்கள்
பார்க்கும் கண்ணுக்கு விருந்தடி!
களத்தில் கட்டில் போட்டு
கண்ணயரும் உழவனுக்கு
காலம்காட்டும் வெள்ளியடி !!
கிணத்து தவளை கத்திக் கத்தி
உயிரைமாய்க்கும் அதுபோலே
இயற்க்கை நேசிக்கும் உயிர்களுக்கு
மறுப்பு வந்த காலமடி ...!!
மண்ணை தோண்டி மாளிகை எழுப்பி
மனிதன் கண்ட அழகு குடில்!!
மழையை மாய்த்து மண்ணில் புதைத்து
மன்றாடும் உலகமடி ...!
இருக்குமிடத்தை அழகுறச் செய்ய
மரத்தை சாய்த்து மனதை
மரத்துபோக செய்தனரே !
பளிங்கு சாலையமைத்து
ரதத்தில் ஏறி சீறிபோகும் மானிடமே !
சிரத்தைக் கொள்ளாது
சொகுசாய் வாழும் நீவீர் !
சுவாசம் கொன்று சவமாய்
மாசை கூட்டிச் சென்றால்
இம்மண்ணில் பிறந்த நீர் வீணே !
இவ்வுலகம் உய்ய இயற்கையெல்லாம்
தன்னுயிரை மாய்க்க...
இயற்க்கை தந்த மானிடமோ
இயற்க்கை கொன்று தன்வாழ்வை
நிலைக்கச் செய்ய போராட்டமா ?
எதுக்கும் ஓர் எல்லையுண்டு
அதற்காக அமைதிக் காக்குது இயற்கை
அவ்வழியை விரைந்து கடக்க அவசரமோ ?
அதிவேக ஒட்டம் ஆபத்தென்பது அறிந்தே
அவரசமாக பறக்கும் கூட்டமே...!
ஆளப்பிறந்தாயா நீ ?
உயிர் வாழப்பிறந்தாயா ?
ஆணவம் பெருக்கெடுத்து அழியப் பிறந்தாயா ?
நீயும் வாழ்ந்து இயற்கையை வாழவைத்தாலே
நிலையாய் சுழலும் உலகு !