புன்சிரி வீசு இன்முகமாய் தினம்
புன்சிரி வீசு இன்முகமாய்...........
முல்லை முகிழ் குவியலுக்கு
பிள்ளை யமுதுபூ ஞ்சிரிப்புக்கு
துள்ளி விழும் நீரலைக்கு
வானில் நீந்தும் பறவைக்கு
தாய்மடி முட்டும் கன்றுக்கு
தளிர் நிலவு பாலுக்கு
குளிர் வீசும் காற்றிர்க்கு
அன்னை அளித்த அமுதிற்கு
இனிய தளக் கவிதைக்கு
கூடி வரும் நண்பர்க்கு
முகம் அறியா முதியோர்க்கு
மனம் இளைக்க மருந்தாம்
உன் முகம் நிதம் காண
மனம் தொட்டு முகம லர்ந்து
தினம் எங்கும் இனிமை கூட்ட
புன்சிரி........
குறிப்பு: ஓவ்வொரு வரி முடிவில் "புன்சிரி"
என்று சேர்த்தும் படிக்கலாம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
