அன்னையின் அசால்ட்டு

அன்பெனும் கடலில் மூழ்கி
நற்பண்பினைத் தொலைக்கும் தாயே
செய்வது தீமையென அறிந்தும் நீ
மீண்டிட களமின்றி கண்ணீரில் தவிக்கின்றாயே !!

வேதியல் மாற்றத்தாலே
விதையாக விழுந்த மகவை எண்ணி
முலைப்பால் ஊட்டி நீயும்
அன்பால் அரவனைத்தாயே !!

பயத்தை போக்க எண்ணி
வீரத்தை போதித்தாயே !!
விளையாட்டாய் எண்ணி நீயும்
பிறர் பிள்ளையை அடிக்கக் கண்டும்
பரிந்துபேசி அதை மறுத்தாயே !!

ஆசைக்கு ஒருபிள்ளை
அளவுடன் முடித்ததாலோ
அளவுக்கதிக பாசம் வைத்தாய்
அன்பினால் செய்யும் குறும்பை
திருத்திட நீ மறந்தாய் !!

வயது வந்தால் மாறுமென்று
வக்கனையாய் பேசி மழுப்பி
வாய்க்கும் செயல் கண்டு
வாய்விட்டு நீ சிரித்தாய் !!

காலமும் கடந்தது
கட்டுடல் வளர்ந்தது
கல்லான உன் மேனி தளர்ந்தது
கண்மணி அவன் மனம் கல்லாகி போனது.

காதலெனும் போக்கில்
முன் அனுமதி ஏதுமின்றி
கல்யாணம் செய்து
வாசலில் வந்து நின்றான்

துடிதுடித்தாய்
பரிதவித்தாய்
தந்தையற்ற கவலை மறந்து
வளர்தாளாக்கினாய் அவனை நீ
உன்னை மறந்து முடிவெடுத்தான் வாழ்வை !!

அதனை உனக்குள் அடக்கி
அன்பு மகனையென்னி
அவனாசைக்காக அவளை
ஆராத்தி எடுத்து வரவேற்றாய்
அன்று கரைத்த திலகம்
உன் உதிரமென்று அறியாமலே ...!

சிலநாள் ஓடியது
உன் நிலையறியாது
சின்னஞ் சிறுசுகளின் சேஷ்டைகள்
முதலாய் முகம் சுளித்தாய்
அன்பு மகனை எண்ணி
அகத்துள் கோபம் கசிந்தாய்

என் செய்வாய் நீ
இளம் ரத்தம்
இருக்கட்டும் மகிழ்ச்சியாக
என்றே எண்ணி அதையும் பொருத்தாய்
உன் அரவணைப்பில் வளர்ந்த பிள்ளை
புது கதகதப்பில் ...

முதலாய் ஆரம்பம்
பாசத்தின் பங்கு போராட்டம்
உன்பக்கமிருக்க அவனை உபசரித்தாய்
அவள் பக்கமிழுக்க உன்னை உதாசீனபடுத்த
பொங்கியது கோபம் முதலாய் ....
அதுவே முடிவாய் ...

வந்த வழி என்ன ?
கொண்ட சொந்தமென்ன ?
எந்தன் மடியில் கைவைக்கும்
நீ மருமகளா ?
துடி துடிக்க உதடசைய ...

எந்தன் வழி பற்றி
இழிவாய் உரைக்க
சொந்தமில்லைஎன்று நீ
சொன்ன சொல்லை குரங்காய் பிடிக்க
கொட்டியது வார்த்தை மழை !

கட்டிய துணியோடு வந்து
கனவனெற்று உரிமைக் கொண்டாடுபவளே
பத்துமாதம் சுமந்த வயிரடி
பத்தியமாய் கிடந்து பெற்றது நானடி !!

ஒப்புக்கு சப்பாணி பேச்சு எதற்கு ?
உன் மகனே கூரட்டும் தீர்ப்பு !
மங்குனி மகனே சங்கு நீ ஊது
மாதுவா ?அந்த மாதாவா ?
வெருட்டென கோபம் எட்டிப்பார்க்க
வெறுத்தது தாயின் பாசம்

வயசான காலத்தில்
வாயைவைத்து சும்மா இருக்க மாட்டியா ?
அன்னை கிளவியாகிறாள்
கண்ணில் கிளறி தவிக்கிறாள்

உன்னை பெரிதென எண்ணி
ஊர்பகை ஏற்றேனே
முன்னே அறிந்திருந்தால்
முலைப்பால் மறுத்திருப்பேன்
அப்பால் நான் செய்த தப்பால்
இப்பால் புலம்பி தவிக்கின்றேனே

மனம் ஒத்துழைத்தாலும்
உடல் தெம்பின்றி என் செய்வேன்
உன்னை அனுசரிப்பேன்
உன்னவளை நான் பொறுக்கேன்
பின்னே நோவு வந்து போகும் முன்னே
இந்நேரம் என்னுயிர் பிரிந்திடக் கூடாதோ !

அம்மா ....
மகனே ...

புலம்பலை நிறுத்து
புதுமணம் புரிந்து
மகிழ்ச்சியை தொலைத்து
மனஉளச்சலை தூன்டாதே
உனக்கு நிம்மதி வேண்டின்
நீ மட்டும் தனித்திரு
நாங்கள் தனியாக செல்கிறோம் .

கேட்டது தாய்
சொன்னது மகன்
பிரசவத்தில் வந்த பெரும்மூச்சு
மறுபடியும் வந்து முட்ட
மண்மீது சாய்ந்து மயக்கமுற்றாள்
மரணம் தொட்டால் ...

எழுதியவர் : கனகரத்தினம் (25-Sep-14, 4:55 am)
பார்வை : 195

மேலே