+என்னை நீ ஒதுக்க நினைத்தாலும்+
என்னை நீ
ஒதுக்க நினைத்தாலும்
என் நினைவை உன்னால்
ஒதுக்க முடியாது!
என்னை நீ
உன்னிலிருந்து
பிரிக்க நினைத்தாலும்
என் கனவிலிருந்து உன்னை
பிரிக்க முடியாது!
ஏனெனில்
நீ நானாகாவிட்டாலும்
நான் நீயாகி
பல நாளாகிவிட்டது!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
