+மங்கள்யான்+

செவ் வாயை
எட்டிவிட்டான் மங்கள்யான்!

சிவப்புக் கிரகத்தை
தொட்டுவிட்டான் மங்கள்யான்!

பாரத‌த்தை பார் போற்ற
பத்து மாதம் பயணம் செய்து

செவ்வாயின் சுற்றுப்பாதையில்
இன்னும் பத்து மாதங்கள்
சுற்றுப்பயணம் செய்து
பூமியின் ஆர்வலர்களின்
ஆவலைத் தீர்க்கவேண்டி
ஒரு தீர்த்த யாத்திரை சென்றுள்ளான் மங்கள்யான்!

அவனை வடிவமைத்தோர்
ஆனந்தக் கண்ணீர் வடிக்க‌
அவனின் பாதம் செவ்வாயில் பட்டதும்
பாரதத்தில் உள்ளோரெல்லாம்
பெருமைப்பட செய்துவிட்டான் இவன்!

மங்கள்யான் தோழா!
உன்னிடம் ஒரு வேண்டுகோள்!
சில பசி போக்கும் மருந்துண்டா அங்கு என‌
எங்களுக்கு ஒரு செய்தியனுப்பு...

ஏழைகளின் வயிற்றுப்பசி

அரசியல்வாதிகளின் வஞ்சப்பசி

அதிகாரிகளின் லஞ்சப்பசி

பல பெரியோர்களின் ஊழல்பசி

காமுகர்களின் காமப்பசி

இன்னும் இன்னும் பல பசி போக்க‌
ஏதேனும் மருந்தங்கு கண்டால்
மறக்காமால் சேதி சொல்லு!

வருங்கால மக்களாவது
அமைதியாய் அழகாய் வாழட்டும்
உன்னைப் பெற்ற பூமியில்......

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Sep-14, 1:30 pm)
பார்வை : 229

மேலே