புத்தகத்தோழி

வாழ்வின் இனிமையை
வரிகளில் விளக்கி,
அறிவின் பசியாற்றும்
அன்புத்தோழியே!

தனிமை நோய்
நீக்கி - என்
தகுதி வளர்க்கும்
அறிவுப்பெட்டகம் நீ!!

சுவாசிக்கும் பணிபோல்,
வாசிக்கும் பணிகூட
உயிரின் உறவானது!
உந்தன் வரவால்!!

ஊற்று தரும்
உன்னத நீர் போல,
என் விழிகள் பருகிட
மதியினை நிறைக்கிறாய்!

எண்ணத்தில்
தூய்மையை விதைத்து
நட்பாய் நல்வழிப்படுத்தும்
நீ - இணையில்லா
தோழமையின் அடையாளம்!!...

எழுதியவர் : (25-Sep-14, 2:47 pm)
பார்வை : 320

மேலே