படைப்பு

வண்டருந்தும் தேனை
மலரிதழில்
மனம் அருந்தும் தேனை
கவிப் புத்தகத்தில்
இதழ் பிரியும் மலர்
இறைவன் படைப்பு
இதழ் விரியும் நூல்
கவிஞன் படைப்பு !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Sep-14, 4:49 pm)
Tanglish : PATAIPU
பார்வை : 117

மேலே