வெண்ணிற புரவியில் வந்தவள்

விழிகள் மீனாம்
இதழ்கள் தேனாம்
என்மேனி பாலாம்
அடடா...புறங்கை நக்கி.!
பெண்ணவளை ருசிக்கவோ
மீனும் தேனும்.!

தென்றலின் மணமாம்
தேகம் பரிமளமாம்
கூந்தலில் ஆய்வுகளாம்
அடடா...நாற்ற நாசி.!
பெண்ணவளை நுகரவோ
தென்றலும் பரிமளமும்.!

அன்னப் பறவையாம்
பஞ்சவர்ணக் கிளியாம்
மயிலாம் மைனாவாம்
அடடா...கண்களில் புரை.!
பெண்ணவளை களிக்கவோ
கிளியும் , மயிலும்.!

முகமோ வெண்ணிலவாம்
முறுவலோ விண்மீனாம் ,
மோகப் பனித்துளியாம்
அடடா...இரவின் இருள்.!
பெண்ணவளை சாய்க்கவோ
நிலவும் , துளியும்.!

அடடா அடடா போதுமடா.!
என்னை அழகி என்றதும்
உன்னை வீரன் என்றதும்.
அடடா அடடா போதுமடா.!
நான் செங்கனி ஊறிய வாய் திறந்ததும்,
நீ வெண்ணிற புரவியில் வந்ததும்.!

என்னையும் அருட்சுடர் என்றோ ஆளவந்தாள் என்றோ
அறிவழகி என்றோ அழகுவேல் என்றோ
அரிமா என்றோ அரசு என்றோ
சொல்லிப்பார்.!
ஒத்துத்தான் போகும்.!!



- மணிமேகலை மணியின் நேற்றைய "வருணனைகளின் பொருள் என்னவோ" கவிதையை ரசித்து அதில் இருந்து வார்த்தைகள் திருடி , முன்னால் வந்த பொள்ளாச்சி அபி தோழரின் " தகிக்கிறது நெருப்பு " கவிதையின் எண்ணங்களையும் களவாடி நான் படைத்த கதம்ப சாதம் .பாராட்டுகளை அவர்களுக்கும் , திட்டுகளை எனக்கும் அனுப்பிவிடுங்கள்.

எழுதியவர் : ராம்வசந்த் (24-Sep-14, 12:12 am)
பார்வை : 216

மேலே