தாய் நாடு போற்றா NRI-க்கு

நீ அழும்முன்னெ நின் குறை தீர்ப்பாள்
நீ வரும்முன்னெ உன் சுமை ஏற்றாள்
பல வலி தாங்கி புவிதனில் ஈந்தாள்
நிலை பெறும் வாழ்வு என நினைத்தாள்

கலை பல கற்று நிலை உயர்ந்தாய்
தலை மகன் வளர்ந்தான் மனம் மகிழ்ந்தாள்
புலன் பெயர்ந்தாய் தன் தாய் மறந்தாய்
இலன் அவன் என தாய் அழுதாள்

ஊரில் இருந்து உதட்டோரம் பரிதவித்து
பாரில் என்போல் உண்டோ என பறைசாற்றி
வேரிலிட்ட வென்னீரில் தாய் தவிக்க
ஊரிலிருந்து உன் கரிசனம் யார் கேட்டார?

பக்கத்தில் இல்லை துக்கத்தில் துணைஇல்லை
தத்தி தவிக்கையில் தலைமறைவாய் இருந்துவிட்டு
யார் மூலமோ கேட்ட ஓலம் மார்துளைக்க
காசோலை மூலம் நீ கண் துடைப்பாயோ?

விட்டு சென்றதால் வீண் போகவில்லை
துட்டு கேட்டு கை ஏந்த வில்லை
எட்டு திசையிலும் எம்புகழ் கேள்
பிட்டு வைக்கிறோம் புரிந்து கொள்

பஞ்சம் என்ற நிலை மாறியது
கெஞ்சும் நிலையும் மாறியது
பல கல்வி சாலை கூடியது
கல்வி கற்றவர் தரம் கூடியது

உலகத்தர மனித வளம் நாடி
பலதரப்பட்ட தொழிற்சாலை கோடி
உலகத்தோர் மெச்சும் மேம் பொருட்கெல்லாம்
பலகற்ற எங்கள் மென் பொருளே வேர்

அமரிக்கா புகழ் அமேசான் மைக்ரோசாப்ட்டுக்கு
அமைந்தகரையில் தான் சேவை மையம் இனி
அடுத்தவீட்டு அன்பர்கள் பின் தூங்கி எழாவிடில்
அயல் நாடுகளில் ஏது தினம் விடியல்

எத்துனைக்கும் இங்கே சார்ந்திருக்க எதற்கிந்த ஏளனம்
பத்து நாள் நிறுத்தினால் பரிதவிப்பாய் பாடு
பாய்வதை நிறுத்தி தாய் நிலை உயர்வாய்
தாய் மனம் நொந்தால் தாங்காது!

எழுதியவர் : முரளி (26-Sep-14, 8:14 am)
பார்வை : 126

மேலே