என் காதல் சாகாது

தினம் தினம் சாபவன் நான்
உன்னால் வாழ்பவன் நான்
காதல் சொல்லாமல்
நாளும் தவிப்பவன் நான்

உனக்கென்ன பார்த்துவிட்டாய்
பார்வையால் பேசிவிட்டாய்
காதலை சொல்லாமல்
என்னை சாகடித்தாய் ...

பிறர் கேட்டால் நண்பன் என்றாய்
தினம் தினம் வலி கொடுத்தாய்
பிரியும் நேரம் மட்டும்
மௌன வலி கொடுத்தாய்

உன்னை சேராமல்
என் உயிர் போகாது
என் கவிதைகள் உள்ளமட்டும்
என் காதல் சாகாது .......

எழுதியவர் : ருத்ரன் (25-Sep-14, 6:30 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 81

மேலே