மோடிச் செல்லம்

மோடிச் செல்லம் இங்க வாடிச் செல்லம்.

யாரை நீ மோடிச்செல்லம்னு கூப்பிட்ட?

ஏன் எம் பொண்ணத்தான்.

ஏண்டி உங்களுக்கு பிரதமர் மோடிமேல அதிக பற்று இருக்கறாப்போல இருக்கு. அதுக்காக ஆண்பிள்ளைக்கு வைக்கிற பேரப் போய் ஒரு பெண்பிள்ளைக்கு வச்சிருக்கீங்க அது சரியா?

அடியே தோழி ஸ்வேதா வெள்ளச்சி, நீ நாலு வருஷம் கழிச்சு எங்க வீட்டுக்கு வந்திருக்கே. எங்க குடும்பத்ல அர்த்தம் தெரியாத பேரையெல்லாம் குழந்தைங்களுக்கு வைக்கற பழக்கம் இல்ல. ’மோடி’ன்ற சொல் தமிழிலும் இருக்கு. மோடின்னா ’கண்காட்சி’, ’காட்சி’ன்னு பல அர்த்தம் இருக்கு. அதுக்கு குஜராத்தி மொழிலெ என்ன அர்த்தமோ எனக்குத் தெரியாது. எம் பொண்ணுக்கு வயசு மூணு. அந்தப் பேருக்கும் வயசு மூணு.

ஓ அப்பிடியா?


(மோடி = 1. An exhibition, show வேடிக்கை, காட்சி 2. Haughtiness, austerity, 3. A kind of craft or enchantment 4. A love quarrel, பிணக்கு, 5.
A forest goddess).

Winslow’s A Comprehensive Tamil English Dictionary. New Delhi: Asian Educational Services, 1992. பக்கம் 902.. (First published in 1862)

எழுதியவர் : மலர் (25-Sep-14, 9:08 pm)
பார்வை : 211

சிறந்த நகைச்சுவைகள்

மேலே