ஏமாற்றம்

தாமரை
தன் மீது கொண்ட காதலால்தான் 
சூரியன் உதிக்கிறது என்று
தாமரை நினைத்துக் கொண்டால் 
சூரியன் தான் என்ன செய்யும்..? 
 
கடற்கரை 
தன் மீது கொண்ட காதலால்தான் 
கடல்அலை ஒயாது மோதுகிறது என்று
கடற்கரை நினைத்துக் கொண்டால் 
கடல் அலைதான் என்ன செய்யும்..? 
 
பூமி
தன் மீது கொண்ட காதலால் தான்
வானம் பொழிகிறது என்று
பூமி நினைத்துக் கொண்டால்
வானம் தான் செய்யும்..? 
 
மலர் 
தன் மீது கொண்ட காதலால் தான்
வண்டு தன்னயே சுற்றி சுற்றி வருகிறது என்று
மலர் நினைத்துக்கொண்டால்
வண்டு தான் என்ன செய்யும்..? 
 
விளக்கு
தன் மீது கொண்ட காதலால் தான் 
விட்டில் பூச்சி தன்னையே
மாய்த்து கொள்கிறது என்று
விளக்கு நினைத்து கொண்டால் 
விட்டில் பூச்சி தான் என்ன செய்யும்..? 
 
நான் 
நீ என் மீது அன்பு வைத்திருக்கிறாய் என்று 
நானே நினைத்துக் கொண்டால் 
பாவம் நீதான் என்ன செய்வாய்..?
 
 
 
ஸ்ரீசந்திரா

எழுதியவர் : srichandra (25-Sep-14, 11:03 pm)
Tanglish : yematram
பார்வை : 147

மேலே