பகத் சிங் -ரௌத்திரத்தின் முத்திரை -

படித்ததில் பிடித்தது..-பகத் சிங் -ரௌத்திரத்தின் முத்திரை ..!

நான் மனிதன்,சமூகத்தினைப் பாதிக்கும் எல்லாவற்றையும் குறித்து எனக்கு அக்கறை உண்டு..!” என தனது சிறைக்குறிப்புகளில் எழுதிவைத்திருந்த,பஞ்சாப் சிங்கம் பகத்சிங்கின் பிறந்தநாள் இன்று..!

1929-ஆம் ஆண்டு ஏப்ரல்- 8ம் நாள் டில்லி நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விரோத மசோதாவிற்கும், விடுதலைப் போராட்ட ஒடுக்கு முறைக்கும் எதிராக வீசப்பட்ட குண்டும், எறியப்பட்ட துண்டு பிரசுரங்களும், உதிர்க்கப்பட்ட முழக்கங்களும் “இன்குலாப் ஜிந்தா பாத்” என்ற ஒன்றையே! கேளாத செவிகளுக்கு கேட்கட்டும் என்று உழைப்பாளிகளின் உருவமாய் நின்று உன்னதம் செய்தவன் ஓர்இளைஞன்.

21-வயதான பஞ்சாபைசேர்ந்த பகத்சிங்கும் அவனது சகாக்களுமே அதைச் செய்தவர்கள். இன்றைக்கும் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தை பதைபதைக்கச் செய்யும் பெயர்களில் ஒன்று பகத்சிங்கினுடையது தான். இந்திய வகுப்பறைகள் சொல்லிக்கொடுக்கும் விடுதலைப் போராட்ட வரலாறுகளில் இவர்களின் பெயர்கள் இன்னும் தீவிரவாதிகள் என்ற பட்டியலி லேயே தொடர்கின்றன 400ஆண்டுகளின் விடுதலை ப்போராட்ட நினைவுகள் துரோகி களையும், குரோதங்களையும் நம் கண் முன்னே கருப்பு-வெள்ளை யாய் கரம் நீட்ட காண்கிறோம்.

இந்திய விடுதலைப் போராட் டம் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற இரண்டு மதிப்பெண் கேள்வியில் முடிந்துபோகிறது. இந்திய விடுதலைப் போராட்டம் பல காத்திரமான உண்மை களை நாட்டுமக்களுக்கு தந்துவிட்டுச் சென்றது.

அதன் களம்இந்தியாவின் பல ஒன்றியங் களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வரலாறு என்ற ஒன்றினை நாம் வரையறுப்போ மானால் அதில் பகத்சிங் தனித்துவ மானவன்..நிச்சயமாக, செப். 27, 1907 - பஞ்சாபின் பங்கா கிராமம் அவனைஈன்றெடுக்கும்போது இதனை அறிந்திருக்காது.

ஆம். 1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் இந்திய சுதந்திரப் போராளிகளின் ரத்தம் ஊறிய பிடி மண்ணை எடுத்துக்கொண்டு நிற்கிறான் அவன். விடுதலை வெறியேறிய ரத்தம் அவனையும் தீவிரமாக போராட்டக்களத்தில் ஈடுபடவைக்கிறது. லாகூரின் டி.ஏ.வி. பள்ளியில் காயத்ரி மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்த அவனது மனது, தேசிய கல்லூரி யில் சேர்ந்த பிறகு எல்லா மதப்பிரச்சனைகளையும் ஏன் கடவுள் களையும் கூட விவாதிக்கவும், விமர்சிக்கவும் தொடங்கியது.
வசீகரமிக்க அவனது முகமும்,பொலிவும் எவரையும் எளிதில்கவர்ந்துவிடும். சராசரி இளைஞ னாய் ஆனால் அசாத்தியங்களை செய்துமுடிக்கும் வல்லமை உடையவனாய் மாறிப்போனான். அவனது போராட்டங்களும் எழுத்தும், பேச்சும் தர்க்கமும் தனித்துவமானவை. தனது தோழர் களுடன் பழகும்விதமும் அவர் களது சிந்தனையில் கலகம் செய்வதும், அவனைத் தவிர வேறொரு வராலும் முடியாதவை.1922-ம் ஆண்டு சௌரிசௌரா நிகழ்விற்குப் பின் இந்திய விடுதலைப்போராட்டம் தேக்கமடைந்து மக்களை பீதியடையச் செய்தது. அதன்பிறகுதான் பகத்சிங்கும் அவனது தோழர் களும் 1924-ம் ஆண்டு சச்சீந்திரநாத் சன்யால் தொடங்கிய இந்திய குடியரசுக்கழகத்தில் இணைந்து விடுதலைப்போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

1925-ம் ஆண்டு நவஜவான் பாரத் சபாவை தொடங்கி இளைஞர்களை எல்லாம் ஒருஅமைப்பின் கீழ் அணி திரட்டி அதிலிருந்து வெகுஜன மக்களைத் திரட்டும் விடுதலைப் போராட் டத்தை நோக்கி இயக்கத்தை முன்னெடுத்தார்கள்.இந்தியாவின் விடுதலை என் பது வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல; மனிதனை மனிதன் சுரண்டுகிற சிந்தனைக்கும் செயலுக்கும் முடிவு கட்டுவது சோசலிச அமைப்பினை உருவாக்கு வதும்தான் விடுதலை என்பதே பகத்சிங்கின் லட்சியமாக இருந்தது.ஏகாதிபத்தியம் இருக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு உரக்கச் சொன்னவன் பகத்சிங்.

தூக்குமேடையில் துணிந்து ஏறியதற்காய் மட்டும் நாம் பகத்சிங்கை பேசவில்லை. ஏனெனில் காந்தியை கொன்றே கோட்சேவும் தூக்குமேடை ஏறிய வன்தான். ஒருவன் எதற்காய் யாருக்கான கொள்கைகளுக்காய் தன் உயிரை முன்மொழிகிறனோ அதன் பொருட்டே அவன் பேசப் படுகிறான்.நாமும் பகத்சிங்கை வெறும் போராளி என்ற குடுவைக்குள் மட்டும் அடைத்துவைத்துவிட முடியாது. அவ்வாறு நினைப்பது நம்முடைய அறியாமையும் கூட. லாலாலஜபதிராயை கொன்ற சாண்டர்சனை கொல்வது மட்டுமே பகத்சிங்கின் நோக்க மில்லை. அதற்கான காரணம் விளக்கப் படவேண்டும் என்றுதான் பிரசு ரங்களை வெளியிட்டார்கள்.

“ஜாக்கிரதை, அதிகார வர்க்கமே ஜாக்கி ரதை!” என்ற பேரெழுச்சியோடு அதற்கான வீரமும் அவனிடத்தில் மட்டுமே நிறைந்திருந்தது.நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய பிறகும்கூட அஞ்சி ஓடா மல் கைதாகி, நீதிமன்றத்தை பிரச்சாரத்திற்கான மையமாக பயன்படுத்துவதுதான் அவர்களது நோக்கமாக இருந்தது. ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளைக்கூட இந்திய விடுதலைப் போராட்டத் திற்காக பயன்படுத்திய பஞ்சாப் சிங்கம் அவன். நீதிமன்ற நடுவர்களுடனும் அரசின் உயர் உறுப்பினர்களுடனும் அவன் நீதிமன் றத்தில் நடத்திய விவாதங்களும் விமர்சிப்புகளும் இந்திய மக்கள் மனதில் புதிய வெளிச்சத்தை உருவாக்கின.

இவைதான் இந்திய விடுதலைப்போராட்டம் காந்தி யிடமிருந்து விலகி பகத்சிங்கை நோக்கி நகர்ந்த மைய நாட்கள்.“நான் மனிதன், சமூகத்தினைப் பாதிக்கும் எல்லாவற்றையும் குறித்து எனக்கு அக்கறை உண்டு.”என தனது சிறைக் குறிப்புகளில் எழுதிவைத்திருந்த பகத்சிங், தங்களை தூக்கிலிடுவதற்கு வந்திருந்த அதிகாரிகளைப் பார்த்து இவ்வாறு சொன்னான். “முதலாளித் துவச் சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்தப்போர் எங்களோடு துவங்கவு மில்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதும் இல்லை”.நிச்சயம் இதற்கான நெஞ்சுறுதி யைப்பெற்ற இந்தியாவின் துருவநட்சத்திரம் அவன்.

பகத்சிங்கை தூக்கிலிட்ட ஜெயில் சூப்பிரண்டன்ட் மரண தண்டனை நிறைவேற்றிய சான்றிதழை இவ்வாறு அளிக்கிறான். “நான் பகத்சிங்கின் மரண தண்ட னையை அவரைத் தூக்கிலிட்டு நிறைவேற்றியதற்கான சான்றி தழை இங்கே அளிக்கிறேன். அவரைக் கழுத்தில் தூக்கிலிட்டு, அவர் சாகும்வரைக்கும் தூக்கில் போட்டு நிறைவேற்றப்பட்டது. அது லாகூர் மத்தியச் சிறையில் 1931ம் ஆண்டு 23ந் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்றப்பட்டது. உடல் அப்படியே 1 மணி நேரத்திற்கு தொங்கவிடப்பட்டிருந்தது. அவர்உடலில் உயிர் பிரிந்து விட்டது என மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தும் வரைக்கும். தொங்க விடப்பட்டிருந்தது.

அப்போது எந்த எதிர்பாரத விபத்தும் அல்லது தவறும் அல்லது துஷ்பிரயோகமும் நடக்கவில்லை”. இறந்த பின்பும் ஏகாதிபத்தியத்தை அஞ்சி நடுங்கச் செய்தவனின் வாரிசுகளாய் அவ னது உயிரின் விளைச்சலில் நாமெல்லாம் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். இன் னும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தஅவனது போர் முடிவடைய வில்லை. வலுப்பெறவேண்டிய தேவை அதிகரித்து உள்ளது. -

எழுதியவர் : எஸ்.கார்த்திக்-SFI - மதுரை (27-Sep-14, 10:47 am)
பார்வை : 1427

மேலே