மணிக்கட்டில் சற்று மயக்கமடி - இராஜ்குமார்

மணிக்கட்டில் சற்று மயக்கமடி
===============================

மூன்று வேளையும் விரதமடி - ஆனால்
மூச்சுக்குழல் முட்டுதடி
உணவுக்குழல் நுனிவரை
உன்னினைவே நிரம்பியதால் ..!!

விரலில் ஏதோ நடுக்கமடி
நரம்பின் நடுப்பகுதியில்
நடனமாடும் நங்கையே
உன்னழகின் நளினத்தால்

மணிக்கட்டில் சற்று மயக்கமடி
அம்மூட்டின் முன் பகுதியை
முரணாய் முறைக்கும்
உன்விழி பார்வையால் ..!!

- இராஜ்குமார்

நாள் : 1- 9 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (28-Sep-14, 1:38 pm)
பார்வை : 82

மேலே