விரகத் தீ
இரவினைப் பகலாய் மாற்றி
....இங்கொரு புதுமை செய்வோம்
பரவிடும் ஆசைத் தீயை
....பங்கிட சேர்ந்து உய்வோம்
தரவிடு முதலில் என்னை
....பெறுவதைப் பிறகு பார்ப்போம்
கரங்களின் நோக்கம் எல்லாம்
....கட்டியே அணைக்கத் தானே...
போதும் என்ற வார்த்தையினை
.....போர்வைக் குள்ளே தள்ளிவைப்போம்!
ஏதும் அறியா குழந்தையைப்போல்
....எக்குத் தப்பாய் சொல்லிவைப்போம்!
வாதம் விட்டே வாய்நிறைய
....வாங்கக் கொடுக்க திளைத்திருப்போம்!
சேதம் சிறிது நிகழ்ந்தாலும்
.....சேர்ந்தே அதனை இரசித்திருப்போம் !
கொஞ்சும் மொழியால் மஞ்சமதில்,
....கெஞ்சிக் கேட்க வெட்கமொழி!
பஞ்சைப் போன்ற பெண்மையினை
....பற்ற வைக்கப் பார்ப்பவன்நீ!
மிஞ்சிப் போவாய் வரம்கொடுத்தால்
....மீதம் கொஞ்சம் வைத்திடடா!
நெஞ்சம் முழுதும் உனக்குத்தான்
....நீயே பார்த்து புரிஞ்சிக்கடா!..