வலிக்கும் இதயத்தின் கவிதை

என் இதயத்தை கேட்டுப்பார்
உன் நினைவுகளை தாங்காமல்
துடிக்கும் துடிப்பை .....!!!

காதல் நரம்பில் வந்த
இன்ப இசையில்
சோககீதம் பாடவைத்தாய்.....
எப்படியோ என்னுடன் நீ
இருப்பாய் என்ற ஆசையுடன்
வாழ்ந்தேன் ....!!!

என் ஒவ்வொரு இதய
நரம்பையும் அறுத்துவிட்டு
காதல் வீணையில் ஓசை
இல்லை என்கிறாயே ....!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

எழுதியவர் : கே இனியவன் (28-Sep-14, 8:26 pm)
பார்வை : 561

மேலே