இரத்த தானம்
காதலின் பேர் சொல்லி
காளையர் கூட்டம்
கலங்காமல் செய்யும்
கை மீறிய காரியம்
தன் உடல் கிழித்து
குருதி தனைப் பாழ் செய்தல் !!!
நீ சிந்தும் குருதிதனை
உன் உடலில் உண்டாக்க
உன் பெற்றோர் பட்ட பாட்டை
நீ நினைவாயோ ???
அவள் பெயரை நீ சொல்லி
சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும்
பாழாய் போகிறதே
பாவி மவனே !!!
அவள் பெயரை நீ சொல்லி
தானமாய் தந்தாலே
பலகோடி புண்ணியம்
வந்தடையும் இருவர்க்கும்!!!
இதை அறிவுரையாய் நீ எண்ணி
அலட்சியம் செய்தாலோ
நீ சிந்தும் ஒரு துளியும்
பெரும் பாவ காரியமே !!!!