என் பிடித்தமானவளுக்கு

என் பிடித்தமானவளுக்கு
உன் முகவரி தெரியாமல்
உன்னை நினைப்பவள்
எழுதும் கடிதமிது !!!!!!!
அணைத்து பேச அன்னை இருக்கிறாள் !
அதட்டி பேச அப்பா இருக்கிறார் !
ஆறுதலோடு பேச அண்ணன் இருக்கிறான் !
கொஞ்சி பேச நீயில்லையே !!
என்று கெஞ்சி கேட்கிறது
என் மனம் என்னிடம் உன்னை !!!!!
கட்டிய கூந்தலை கழட்டிவிட்டு
சின்ன சண்டைப்போடும்
செல்ல அக்கா நீயில்லையே !!
விரல் பிடித்து
வீட்டுக்கு அழைத்து வரும்
என் பள்ளி நாட்களில் நீயில்லையே !!
வந்த காதலை சொல்லி
முடிவுகள் கேட்கும்
முக்கிய தருணத்தில் நீயில்லையே !!
நடந்த நிகழ்வுகளில்
என் பக்க ஆதரவுக்காக நீயில்லையே !!
நகரும் நாட்களில்
வழித்துணையாய் வர நீயில்லையே !!!
எங்கே சென்றாய் .?
எந்த அத்தைக்கு மருமகளானாயோ !!
எந்த மாமனுக்கு மனைவியானாயோ !!
எந்த குடும்பத்தின் குலதெய்வமானாயோ !!
முன் ஜென்ம பிறவி
சதி செய்து நம்மை பிரித்து விட்டது !!
அடுத்த ஜென்மத்திலாவது
குறை இல்லாமல் வளர்கிறேன் என்று சொல்லும்
நம் பெற்றோருக்கு மகளாய் பிறந்திடு
நீயில்லாத குறை தீர்ந்துவிடும் எனக்கு !!!!!