காகிதப் பூவாக

காகிதப் பூவாக காய்கிறேன்
கண்டுகொள்ளாத உனக்காக !

காரணம் சொல்கிறாய் என்
காயங்களைக் காணாத நீ !

மாலையாக நினைத்து மலர்ந்த நான்
மயங்குகிறேன் தரையில் வீழ்ந்து !

நறுமணம் இல்லாதவன்தான் நான்
மனம்கூடவா இராது என்னிடம் !

மதுவைச் சுமந்து உன்னை
மயக்க நினைக்கவில்லை !

தயங்கி நின்றே மயங்கி
வீழ்கிறேன் காதல் சொல்லாது !

இறுதியாக இதோ
மணவறையில்

உன் காலடியில் நசுங்கிக் கிடக்கிறோம்
நானும் என் காதலும் !

உன் திருமணப் பரிசாக
எங்கள் உயிரை அள்ளித் தந்து !

எழுதியவர் : முகில் (29-Sep-14, 12:14 pm)
Tanglish : kakithap poovaaga
பார்வை : 399

மேலே