தாய்த் தமிழ் அவள் அன்றோ
மெல்ல நடை பயிலும்
சின்னக் குழந்தையைப் போல்
தவழ்ந்து எழுகின்றேன்
தமிழ் என்னும் உலகத்திலே
துள்ளிக் குதிக்கின்றேன்
பாதம் பதித்த இன்பத்திலே
சொற்கள் அள்ளி எடுக்கின்றேன்
பின் சொல்லிக் களிக்கின்றேன்
அன்னையென அருள் தந்தையென்
கொண்ட என் சுற்றத்திலே
அவர் சொல்வதெல்லாம் நன்மைக்கன்றோ
பிழை காண்பதெல்லாம் கற்பதற்கன்றோ
வளரும் குணம் கொண்ட
சிறு பிள்ளை நானன்றோ
தவறுகள் இயல்பன்றோ
தாய்த் தமிழ் அவள் அன்றோ
நிலவென சிறு கிண்ணமென
கதைகளென காட்சிகளென
அன்னம் அமிழ்தமென
சின்னத் தாலாட்டென
என்னை வளர்ப்பவளே
என் அன்னைத் தமிழ் அவளே...!