சோகமான சுகம்--தனிமையே
மாலைக் கதிரவன் மறையத் தொடங்க -அங்கு வந்துவிடுகிறது
மனிதனுக்கும் களைப்பு ........
பிரியாத பந்தமாய்
விட்டுக் கொடுக்கும் மனம் படைக்கும்
மனிதனும் மண்ணின் நாயகன் தான் .......
பள்ளிக் குழந்தைக்கு பாடத்தோடு
ஒழுக்கமும் சொல்லிக் கொடுக்கும்
ஆசிரியரும் நாயகன் தான் ...........
காடு மேடெல்லாம் சுற்றலாம்
காசு பல சம்பாதிக்கலாம்
அனைத்தும் இருந்து என்ன பயன்--
அன்பு மட்டும் இல்லையென்றால் ........
வெண்ணிலாவின் நிலை தன்னை
வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டே
வேடிக்கையான என் தனிமையும்
சோகமான சுகமே .................