ஏதோ கோபம் என் தேசமிது

காலம் கெட்டுக்கிடக்கிற நாட்டினிலே
ஜாலங்கள் புரிவது சுலபமில்லே…!
கலகம் பரவுகின்ற நாட்டினிலே
கலவரங்களுக்கு பஞ்சமில்லே…!

நீதி செத்துக்கிடக்கிற நாட்டினிலே
நிம்மதியாய் வாழ முடியலே…!
ஜாதி பார்க்கின்ற நாட்டினிலே
மேதையாய் ஆவது எளிதில்லே..!

உண்மை உறங்குகிற நாட்டினிலே
மேன்மையா எதுவும் நடக்கலே…!
அன்மை காலமாய் நாட்டினிலே
அன்னிய சக்திகள் மிரட்டுதே..!

அரசியல் சாக்கடைகள் நாட்டினிலே
வாக்கு வங்கிகள் நடத்துதே..!
அய்ந்து ஆண்டுக்கு ஒருமுறை
பணத்தை வாரி இறைக்குதே !

எத்தனை கட்சிகள் ஆண்டாலும்
பட்டினி சாவுக்கு பஞ்சமில்லை..;
அத்தனை வசதிகள் இருந்தாலும்
பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை..

சாலை அமைப்பதில் கொள்ளையடா
அதை சரிவர அமைப்பதில்லையடா
பாதாள சாக்கடை திட்டமடா – அதன்
பணிகள் மிகவும் மந்தமடா…!

வாகன எண்ணை சேமிக்க
வானொலி டீவியில் பிரச்சாரம் !
அரசின் திட்டங்கள் துவக்கி வைக்க
ஆயிரம் வாகனங்கள் ஊர்கோலம் !

ஆட்டு மந்தைகள் உள்ளவரை
ஆட்சியாளருக்கு இல்லைகுறை
சட்டசபைக்கு வருவதற்கே
தெருவெங்கும் தாறை தப்பட்டை !

அய்ந்து வருட ஆட்டமாம்
அவர்கள் சொல்வதே சட்டமாம் !
பயந்துப் பதுங்கிப் போனாலும்
பாயும் அதிரடி கூட்டமாம் !

நேர்மை என்ற சொல்லுக்கு
யார்ப்பெயரை இங்கே சொல்வது ?
வாய்மை தவறி நடப்பவரையே
சிறப்பு விருந்தினராய் அழைக்குது !

வெள்ளையனை வெளியேற்றி
சுதந்திர காற்றை சுவாசித்தோம் – இன்று
கொள்ளையர்கள் கைகளில் சிக்கி
சுக்கு நூறாய் உடைகின்றோம் !

சாலைவோரமாய் கடைவைத்தார் சான்வயிறு வளர்க்கவே
ஏழையென்ற காரணத்தால் அந்த கடைகளை சூறையாடுதே!
மது கடைகள் ஊரெங்கும் கொடிக்கட்டிப் பறக்குதே
அரசாங்கமே அதற்கு வழிகாட்டியாய் இருக்குதே…!

பொது இடத்தில் புகைப்பிடித்தால் அபராதமாம் - ஆனால்
வெண்சுருட்டு நிறுவனங்களுக்கு புகழாரமாம் !
சீ..! வெட்கப்படு கேடுக்கெட்ட அரசாங்கமே
மக்கள் துக்கப்படும் அளவுக்கு உன் நிர்வாகமா..?

குடிகாரன் பேச்சு விடிஞ்சாக்காப் போச்சு
வேட்பாளன் பேச்சு மேடையோடு போச்சு
வாக்களிக்கும் வரை வாக்காளன் காலில் வேட்பாளன்
வெற்றிப் பெற்றதும் வேட்பாளன் காலில் வாக்காளன் !

எத்தனை காந்திகள் வந்தாலும் தாய்நாட்டை திருத்த முடியாது
ஊழல்வாதிகள் உள்ளவரை நாடு உச்சத்தைத்தொட முடியாது
அந்நிய சக்திகள் நுழைவதற்கு ஆயிரம் வேலிகள் போட்டாலும்
இந்திய சக்திகள் துணையிருந்தால் வேலிகளெல்லாம் வெறும்கூடு !

எழுதியவர் : இரா.மணிமாறன் (1-Oct-14, 7:45 am)
பார்வை : 74

மேலே