தமிழே உன்னை என்னென்று நான் கொஞ்சுவேன்
தமிழே ! தாயே !
ஏடே ! எழுத்தே !
வார்த்தையே ! வாக்கியமே !
வாக்கியத்தின்பால் விளையும் பொருளே !
இலக்கியமே ! இலக்கணமே !
இலக்கணத்தில்பால் பிறக்கும் பிழையே !
உன்னை என்னென்று நான் கொஞ்சுவேன் ???
அன்று பிஞ்சு தமிழை என் நெஞ்சில் விதைத்து
என்னை வளர்க்கும் முயற்ச்சியில் ,,
நீ வெற்றி பெற்றாய் -!
இன்று உன்னை வளர்க்கும் முயற்ச்சியில் நான் ,,,
என் தனிமை எப்போதும்
உன் வளர்ச்சி பற்றியே சிந்திக்கும் ...
என் இதயம் எப்போதும் தமிழ் ! தமிழ் !
என்று சொல்லி தான் துடிக்கும் ....
...................................................அருணன் கண்ணன் .......................................