காந்திக் கலித்துறை
கலித்துறை :
காந்தி மகானைப் போற்றிக் கலித்துறை நானியற்ற
ஏந்தினேன் உள்ளே ஒருவித ஏற்றமே கொண்டநிலை
மாந்தர் குலத்து உதித்த மாணிக்க மானவனாம் !
வேந்தன் புகழ்வாழ் கவென்று ! வெகுண்டூ திடாய்ச்சங்கே !
போர்பந் தரிலே உதித்த பொன்னொளிச் சூரியனை
பார்மிசை பலதே சங்கள் பாடும் புண்ணியனை
ஆர்கலி போலே வாய்மை ஆழமாய்க் கொண்டவனை
மார்தட் டிவாழ்த்து சொல்லி மகிழ்ந்துகொட் டிடாய்முரசே !
விண்ணொடு சேர்ந்து மக்கள் விசயமும் பெறச்செய்த
மண்ணிடை வாழ்த்த முத்து மன்னிய பவளத்தானை
எண்ணிலா புகழுக் குரித்தாய் என்றும் இருப்பவனை
கண்ணாய் காக்கக் கவியே தூது சென்றிடாயே !
-விவேக்பாரதி