தமிழைப் பாடுவேன்
வீதி வெளியெங்கும் பாட்டிசைப்போம்-தமிழ்
....விண்ணைத் தொடும்வரை ஏற்றிவைப்போம்
ஆதி மொழியிது ஐயமில்லை-உல
...காண்ட மொழியிது பொய்யுமில்லை
சோதி இறைவனும் சொன்னமொழி -பல
...சோதனை தாண்டி நின்னமொழி
தேதி இதுவரை வாழும்மொழி-வளம்
...தேடிடத் தேடிடத் தாரும்மொழி
அன்னை அமுதினை ஒத்தமொழி -தமிழ்
...ஆன்மம் துலக்கிடும் சுத்தமொழி
என்னை உயர்த்திடும் இன்பமொழி -இது
...என்றும் சிறந்திடும் அன்புமொழி
முன்னம் உலகினில் வந்தமொழி-பிற
...மொழிகளின் மூலம் தந்தமொழி
சின்னக் குழந்தையும் பேசிடலாம்-இது
...சிந்திக்கத் தித்திக்கும் சொந்தமொழி