வருணிகா

முன்பதிவு செய்த இரயில் தாமதமாகவே வந்தது
பணி நிமித்தமாக மீண்டும் அந்நகரம் செல்கிறேன்
அங்கு எனக்கு பரிட்சயமானவன் அவன் மட்டுமே
பால்ய தோழி மூலம் மறுமுறை அவனது அறிமுகம் ,

இரட்டை சடை பின்னி ஒற்றை பூவினை சொருகி
நான் பள்ளி செல்லும் பாதையில் தான் அவன் இல்லம்
அவன் கண்கள் அனுமதித்த பிறகே நான் கடக்க முடியும்
சாலை வளைவுகளில் அவனை எதிர்நோக்கி விழிகள் விரையும்

என்னை பார்க்கிறானா என நானும் என்னைத்தான் பார்க்கிறாள்
என அவனும் எண்ணி அடிக்கடி விழிரசித்து கொண்டோம்
தினசரி கண்ணாடி முன்நின்று நான் செய்யும் ஒப்பனைகள்
எல்லாம் அவன் கண்ணசைவில் கரைந்தோடி போகும் ,

சற்றே தூரம் கடந்தவுடன் சட்டென திரும்பி பார்க்க
மனம் விழையும்,பார்க்கையில் அவனது இதழ்கள்
மகிழ்வாவலில் இன்பமாய் புன்னைகைக்கும் ,

கோவில் திருவிழா சமயம்,இரண்டாம் முறையாய் சேலை
கட்டினேன் ,விடலைகள் விமர்சனம் செய்தபோது அவன்
என்னைக் காண வேண்டுமென்றே வங்சிமனம் ஏங்கியது ,

பார்வை தொலைவில் அவன் ,விழியில் விழ வேண்டும்
பார்வை பட வேண்டுமென இடம்மாறி மாறி நின்றேன்.
கண்டோம் ,சில உறைந்த நொடிகளுக்கு பின்னர்
என்னையே நோக்கி நேரிடையாய் வந்தான் ,

சேலையின் முந்தியை இறுகி பிடித்தேன் செய்வதறியாது
அடுத்தமுறை சேலை அணிவாயா நம்முடைய
திருமணத்திற்காக எனச் சொல்லி முகம் பார்த்தான்,

வார்த்தை ஓடங்கள் வெக்கத்தில் மூழ்கி போக நாணி
தலையசைத்தேன் ,உடலெல்லாம் தகிக்க வீதியை
தாண்டி ஓடினேன் வெக்கத்திரையிட,திரும்பி பார்த்தேன்
எனை பார்த்தே நின்றிருந்தான் ஆனந்த புன்னகையோடு,

யாருமில்லா சாலையில் இருவர் மட்டும் பயண்ம் செய்தோம்
மேகம் தீண்டா நிலவினைப்போல் உணர்வுகள் பகிர்ந்தோம்
பள்ளி செல்ல யாசித்தேன் தனிமையில் புன்னைகைத்தேன்
அவனளிக்கும் பரிசுகளை பொக்கிஷங்களாய் சேகரித்தேன்,

ஓர் மழை இரவில் குடையோடு நானும் மழையோடு அவனும்
சந்தித்து கொண்டோம் ,சிற்சில இன்னல்களாலும் பள்ளி
மாறி இணைவதாலும் அவனை பிரிய நேரிட்டது ,
முதன்முறையாய் என் கரங்களை பற்றி கண்ணிமையாமல் பார்த்தான்

அவன் கண்ணீரை மழைத்துளிகள் சேகரித்தி கொண்டன
என் குடை காற்றில் பறந்து சென்றபோது நான் அவனை
விட்டுச்சென்றிருந்தேன் ,மழையில் சிக்கி தவிக்கும்
நூலிழையாய் பேதை நான் மனம்தவித்து திரும்பி
பார்க்கையில் , அவன் புன்னைகைத்தான் ,

இரயில் நிலையத்தில் ஆவல் குன்றாமல் அதே பள்ளிச்
சிறுவனைப் போல் என் வருகைக்காக காத்திருந்தான்
வயது அவனை கொஞ்சம் மெருகேற்றிருந்தது ,

அவனுடைய காரில் என்னை அழைத்து சென்றான்
மௌனம் நீடித்தது ,பேசலாம் என்றெண் ணியபோது
அலுவலகம் வந்தது, வேலை முடிந்து திரும்பி வரும்
வரை மகிழுந்திலேயே பொறுத்திருந்தான் ,

பசித்திருப்பேன் என்றறிந்து உணவகம் அழைத்து
சென்றான் என் பள்ளிக்கு எதிரேயிருந்தது அது
உடைகள் வர்ணங்கள் என்று பள்ளி அப்படியே
உருமாறியிருந்தது அதே நினைவுகளோடு

அடுத்த இரயிலிலே புறப்பட வேண்டும் .அவன் ஏதும்
பேசவில்லை ,நான் மறுமுறை சேலை அணிய
விரும்புகிறேன் என் சொல்ல தவித்து வாய்த்
திறக்கையில் மழை தொடங்க விரைந்து புறப்பட்டோம்

மழையின் சாரம் சற்று வீரியமாகவே சிக்னலில் மஞ்சள்
விளக்கு மின்னியது ,இருசக்கர வாகங்கள் செல்லவில்லை
மற்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்ல சிகப்பு
விளக்கு மின்னையில் எங்கள் கார் முதலில் நின்றது

மழையின் பேரிசை காலத்தை உறைய வைத்திருந்தது
மெல்ல மஞ்சள் ஒளி மறைந்து பச்சை விள்க்கு மின்னி
பிரகாசம் அடைந்த போதும் வாகனம் நகரவில்லை
மற்ற யாவரும் இரைச்சலிட்டும் அப்படியே நின்றது

மழை நிற்க ,பார்த்தவர் நகைக்க ,விரல் கோர்க்க ,
அட இது இதழ்கள் பரிமாறிம் முத்தத் தருணம்...

எழுதியவர் : காதலித்தவன் (3-Oct-14, 6:10 pm)
பார்வை : 213

மேலே