ரோஷம்

எனக்கு ரோஷம்
ரொம்பன்னு சொல்றாங்கைய்யா !
காது கண்ணு
மந்தமான
கிழவனால இனி
உபயோகமில்ல ..
சொன்னது வேற யாருமில்ல !
பொண்டாட்டி சொன்ன பேச்சை
கேக்கிற என் புள்ளதாங்க!
சொல்லிக்காம வந்துட்டேங்க ..
என் செல்லி போன எடத்துக்கு
நா போற வர
இந்த ஊரு வந்தனுங்க!
இதுக்கு பேரு ரோஷமாங்க ?

எழுதியவர் : கருணா (3-Oct-14, 6:29 pm)
பார்வை : 595

மேலே