சொப்பனம்

தோளின் மீது சாய்ந்திருந்து -என் துக்கங்களைப பகிர......
மடியின் மீது படுத்திருந்து - உன் கொஞ்சு மொழி கேட்க....
எத்தனை ஆசைகள்.........
சொப்பனமும் ஒரு விதத்தில் சொர்க்கத்தின் நகல் போலும்..

காலை என்பதே என் வாழ்வில் வந்து விடக்கூடாது
எனத் தோன்றுகிறது......
நேரில் வந்து உன் முகத்தை பார்க்க முடியாத எனக்கு -உன்
நினைவுகளைச சுமந்துவரும் இனிய இரவுகளுக்காக....

தூக்கம் வருகின்ற வேளையிலும்- முன்றைய
இரவின் இனிமையை நினைத்து கலைகின்றது ஒரு பொழுது...
இன்றைய இரவில் சொப்பனத்தில்
உனைக் காணத் துடிக்கின்றது மறு பொழுது..

உன்னைப் பற்றிய நினைவுகள் என் நெஞ்சில்
நிழல் விடும் போதெல்லாம் -என்
விழிகளில் வழியும் நீருக்கு விடை தெரிய வில்லை எதற்காக? இருந்தும்
உன் நினைவை சுமந்து வந்த அந்த ஒவ்வொரு
நொடிகளும் என்னால் நேசிக்கப் பட்டவை

கவிதையிலும் உன்னிடம் நான் பொய் கூற விரும்ப வில்லை
ஒரு நாள் முழுதும் உன் நினைவோடுதான் இருந்தேன்
எனக் கூறவில்லை -ஆனால் உன் நினைவுகள் வரும் அந்த நொடிகள்தான்
எனக்கு அந்த நாட்களாய் மாறிய நிலையினை உணர்ந்தேன்..

வாழ்க்கையில் எதற்காகவும்- நான்
இன்பமோ துன்பமோ பட்டதில்லை- உன் நினைவுகளைத் தவிர..
இன்பங்களாக ஒவ்வொரு இரவும் என் கனவினில் வந்து
துன்பங்களைக் கொடுத்து வெளியே சென்று விடுகின்றாய்...

எழுதியவர் : நா.சிறிதரன் (3-Oct-14, 9:10 pm)
Tanglish : soppanam
பார்வை : 217

மேலே