வசந்தமாய் வீசும் இலையுதிர்கால நினைவுகள்-வித்யா
![](https://eluthu.com/images/loading.gif)
வசந்தமாய் வீசும் இலையுதிர்கால நினைவுகள்...........!-வித்யா
முன்னிரவில் தனியே
ஓர் நடைபயணம்..........!
பரீட்சயமான வாசனை
என் நாசித் தொட்டது.........
இது வசந்தமென்றது..........!
என் நினைவுகளில்
பால்ய சிநேகிதி ஊஞ்சலாடினாள்.......!!
இந்த இரவோடு
பதினைந்து வசந்தங்கள் கடந்துவிட்டன.........
ஒரு நட்சத்திரத்தில் இருந்த எனக்கு
இன்னொரு நட்சத்திரத்திலிருந்து
தாவி வந்து முத்தமிட்டவளைக் கண்டு..........!!
வயதுகள் கடந்தும்
வாழ்க்கைகள் மாறியும்
காட்சிகள் மறைந்தும்
ஒவ்வொரு வசந்தத்திலும்
வாசமாய் வீசுகிறாள்.......
என் நினைவுகளில்...............!!