நாளும் பொழுதும்
கேணிக்குள் நீரைத்
தேக்கி வைத்து
தேகம் சுகிப்பது போல
ஊமையின் கனவினில்
உள்ளிருக்கும் காதல்
ஊரறியாத் தரிசனமே . . . . .
பாதை முடிந்தும்
பயணம் தொடரும்
பரிதாப நிலை . . . . . .
பாவையுன் மனதின்
பாவ தாபங்களை
பார்க்கத் துடிக்கிறேன் . . . . .
சோக ராகங்களை
சுரம் பிரித்து
சொர்க்கம் காணுகிறேன் . . . . .
நினைவு வெள்ளத்தில்
நீந்தி மிதந்து
நித்தம் கரைகிறேன் . . . .
அடுத்தது என்ன
அறிந்திடா மனமும்
ஆவலைத் தூண்டுகிறது . . . . .
நினைத்துப் பார்க்கையில்
நெஞ்சம் இனித்து
நேசம் சுரக்கிறது . . . . . .
காதல் பிறந்து
காற்றினில் திரிந்து
கவிதையில் குதிக்கிறது . . . . .
சுடர்விடும் நெருப்பின்
சுடுகின்ற வேதனை
சூட்சுமம் அறிகிலேன் . . . . . . .
இடர் படும் இதயம்
தடம் மாறாத் தாளம்
தப்பிடச் செய்கிறது . . . . . .
உடையோடு பிரிந்த
உருமாறி நூலும்
உள்ளம் கிழிக்கிறது . . . . .
நடை பயின்று
நடக்கும் காதல்
நாணிக் குறுகுகிறது . . . . .
படர்ந்திடும் கொடியாய்
பாவையுன் நிழலைப்
பற்றிடத் துடிக்கிறது . . . . . .
நடித்தது போதும்
நாயகியே . . . .
நலமுடன் கூடவா . . . .
நாளும் பொழுதும் சேரவா . . . . .
*-*-*-*-*-*