தவமாய் தொடர்ந்திட்ட வரம்

அலையாடி
விளையாடிடாது
அமைதியாய்
தவமிருந்த
குளத்தடி நீரிற்கு

அரை வரமாய்
கிடைத்தது
நின்
ஒற்றைக்காலடி...

மற்றோர்
காலடியினை
முற்றும்
பெற்றப்பின்
குறையாய்
கிடந்திடும்
அரைவரம்
அதையும்
முழுமையாக்கி பின்
முற்றுப்பெற்றிட

தவத்தின்
தொடர்ச்சியாய்
குளத்தின்
தவ முயற்சி.......

எழுதியவர் : ஆசை அஜீத் (5-Oct-14, 3:44 pm)
பார்வை : 147

மேலே