மலரும் நினைவுகள் என் காதலில் 555

என் காதல்...

எனக்கும் அவளுக்குமான
தவறாத நாட்கள்...

சந்தித்த நாட்களில்
துளிர்விட்ட நினைவுகள்...

கைகோர்த்து நடக்கையில்
காற்றுக்கும் இடமில்லை அங்கே...

கைபேசியில் குரலும்
குறுஞ்செய்தியும்...

அவளின் உறவுகளிடம்
என்னை அறிமுகம் செய்தாள்...

அவள் அண்ணனின்
திருமணதிற்கு...

பெண் வீட்டாரின்
விருந்தாளியாக...

அவள் தோழிகளிடம்
என்னை அறிமுகம் செய்தாள்...

அவள் குடும்பத்துடன்
கோவில் வந்த போது...

அண்ணியின் தூரத்து
சொந்தமென அறிமுகம் செய்தாள்...

உறவுகளிடம்
உறவானேன் நான்...

காமம் கலக்காத காதலில்
சந்தோஷ சிறகடித்தோம்...

அலைகளில்லா ஆழ்
கடலில் பேரலைகள்...

என் காதலில்
சிற்றலைகள்...

காத்திருக்கிறேன்
நான் காதலுடன்...

அவளோடும்
அவள் உறவுகளோடு கைகோர்க்க.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Oct-14, 4:32 pm)
பார்வை : 210

மேலே