அழகிய தருணம்

மூர்ச்சையான நான்
முனுமுனுத்த நீ
குளிர் அறியா நான் அருகில்
எரிப்பிழம்பாய் நீ
வருடி நின்ற நீ
வறட்சி அற்ற நான்

இருள் துகிலுரித்து நிற்க
பெளர்ணமியை உமிழ்கிறது உன் விழிகள்
எளிதாகிறது அதில் என்
வழிகள்
காற்று கெஞ்சுகிறது
இணைந்த தேகத்தின் இடை
பிரவேசிக்க
சற்று பொறு காற்றே
சலனங்களின் சங்கீதம்
சரிந்து களைப்பாறும் நேரம்
வரும் அதுவரை பொறு காற்றே

எழுதியவர் : கவியரசன் (5-Oct-14, 5:25 pm)
Tanglish : alakiya tharunam
பார்வை : 271

மேலே