அவள்

தன் மெய்யில் பிழை
அரும்பாதவள்
என் மெய்யில் பிழை
விரும்பாதவள்

கண்ணில்
கரு மை பூசி வருவாள் அவள் கோபமா........! என்னுள்
வெறுமை வீசி செல்வாள் அவள்

பொறுமை சற்று குறைவானவள்
பெருமை சொன்னால் கரைவாள் அவள்

நேரம் தாழ்த்த விரும்பாதவள்
தாழ்ந்தால்
நேரில் தாக்கி விடுவாள் அவள்

கொஞ்சி பேசியும் மகிழ்வாள்
அவள்
என்னை கெஞ்ச வைத்தும் மகிழ்வாள் அவள்

தேவதை என்று சொல்லிட
முடியும்
ராட்ச்சசி என்று எண்ணிட மட்டும்
முடியும்

ஆம் உயிரை கொடுக்கும்
விழிகள் பெற்றவள்
உயிரை பறிக்கும் வழிகள்
கற்றவள் அவள்

எழுதியவர் : கவியரசன் (5-Oct-14, 5:27 pm)
Tanglish : aval
பார்வை : 112

மேலே