கண்ணீர் நினைவுகள்-----------நிஷா
ஆண்டுகள் இருபது தவம்செய்து
ஆண்டவன் கொடுத்தான் ஒரு மலரை
அள்ளியணைத்து அன்போடு வளர்த்த
அம்மா உறவு அருகினில் இல்லை
கண்ணீர் நிறைந்த நினைவுகளோடு
கவிதை பிறக்குது எனக்குள்ளே......
வாடிப் போன மலருக்கு
வசந்தம் தந்திட வேண்டுமென
இன்னொரு அன்னை தந்திட்டான்
இனிய 'மாமி' எனும் உறவாக...
கண்ணீர் நிறைந்த நினைவுகளோடு
கவிதை பிறக்குது எனக்குள்ளே.....
கண்கள் பார்த்து கவலை அறியும்
கபடமில்லா அவர்தம் உறவுக்கு
காலம் முழுக்க நன்றி சொல்ல
கடமை பட்டது என்னுள்ளம்
கண்ணீர் நிறைந்த நினைவுகளோடு
கவிதை பிறக்குது எனக்குள்ளே....
கருவில் தரித்த நாள்முதலே
காணக் கிடைத்த அற்புத உறவு
தாய்மாமன் என்னும் உறவினையே
தந்தான் இறைவன் தனித்துவமாய்
கண்ணீர் நிறைந்த நினைவுகளோடு
கவிதை பிறக்குது எனக்குள்ளே....
நூறு ஆண்டுகள் இருவருமே
நோய்நொடியின்றி இனிதாய்
வாழ்ந்திடவே
வரமாய் கேட்பேன் இறைவனிடம்
வாழ்நாள் முழுவதும் இதற்காக....
கண்ணீர் நிறைந்த நினைவுகளோடு
கவிதை பிறக்குது எனக்குள்ளே.....
நிஷா
(என் பாசமிகு மாமா(அம்மாவின் தம்பி), மாமி இருவருக்கும் இக்கவிச்
சமர்ப்பணம்)