நாட்டைக் கழுவிடுவோம்

பொள்ளாச்சி அபி அவர்களின் படைப்பு பார்த்து எழுதியது ...
இந்திய நாட்டை கழுவிடுவோம்-இனி
...எங்குமே தூய்மை உழுதிடுவோம்
முந்திய மாசுகள் நீக்கிடுவோம்-நாம்
...முயன்றிதை சொர்க்கமாய் ஆக்கிடுவோம்
நோய்கள் பரவிடும் நாட்டினிலே-அதை
...நோக்கத்தில் கொண்டிதை ஓட்டிடுவோம்
பேய்கள் உலவிடும் காடதுவாய்-வைத்த
...பேதைமை நீங்கியே நாமிணைவோம்
நாளை எதிர்காலம் தித்திக்குமே-இந்த
...நாட்டின் புகழ்செலும் எத்திக்குமே
வேளை இதில்நாமும் ஒன்றிணைவோம்-முதல்
...வேலையாய் தீமைகள் கொன்றிடுவோம்