அடகுப்பிரசவம்-சீமந்தம் வீடு சீரழியுது தமிழகமே

மதுவைக்கற்பழித்த
மனமே.....
செவ்வனே வீதியில்
நீ
செத்துக்கிடக்க.........!!!
நின்
கருவைத் தாங்கும்
மாது அங்கே
கற்பமுற்று
காத்திருப்பாள்.........!!!
பூவும் பொட்டும்
மஞ்சளும்
புதுச்சேலையும்
வளையலும் நீ
வாங்கி வருவாய்
என
நினைத்திருப்பாள்!!!
வளைகாப்புக்கு
அப்பாவையும்
ஆத்தாவையும்
சொந்தபந்தத்திடம்
போய்ச்சொல்லுமாறு
அனுப்பியிருப்பாள்....!!!
மாலைகள்
கட்டச்சொல்லி
பூக்காரரிடம்
முன் பணம்
கொடுத்திருப்பாள்.....!!!
சீமந்த சேதி
கேட்டு
சம்மந்தி வீட்டார்
சீர் எடுத்துக்கொண்டு
சிறப்பாய்
வந்திருப்பார்.........,......!!!
தாய்மாமனோ
விசேச வீடென்று
வாழைமரங்களும்
மாவிலை தோரணமும்
மாட்டுவண்டியில்
பூட்டிக்கொண்டு
முதல் நாளே
மகிழ்வுடன்
வந்திருப்பார்.................!!!
மாப்பிள்ளை எங்கென்று
மனமாற
கேட்டிருப்பார்...............!!!
கொட்டகைக்காரனோ
கொட்டகை போட
மட்டைகளையும்
மரங்களையும்
இறக்கிக்
கொண்டிருப்பான்......!!!
சொத்தைப்பிரித்துக்
கேட்ட தம்பியோ
வீட்டின் பத்திரத்தை
பரிசோதனை
செய்து விட்டு
தோட்டத்து வரப்புகளை
சரிபாதியாய்
வெட்டிக்
கொண்டிருப்பான்......!!!
வாங்கிய கடனை
வட்டியோடு கேட்டு
கடன்காரன்
வந்திருப்பான்..............!!!
அடுத்தவாரம்வரை
கெடு விதித்து
ஆத்திரத்துடன்
போயிருப்பான்...........!!!
. . . . . . . .
அழுதிருப்பாள்
அர்ப்பிணி
அழுதிருப்பாள்........!!!
அடகுக்காரன் வீட்டில்
அம்மணக்கருவும்
அடைபட்டு,
கருவில் வலித்தால்
அடகுக்காரனின்
அனுமதிவாங்கி
அழுதிருப்பாள்..................!!!
உடன்கட்டை
ஏறும்முன்பே
ஊரான்கடனில்
எரிந்திருப்பாள்..................!!!
வருவான் வருவான்
என
காத்திருந்தும்
வாய்க்கரிசிகொண்டு
வஞ்சக்கடன்
தீர்த்துவிட்டாள்................!!!

அவன் செத்த
சேதி சொல்ல
எவருமில்லை............!!!
பூமியை அனாதையாய்
பெத்தவன்
யாரென
தெரியவில்லை..........!!!
அந்தசாமிக்கும்
செத்தவன் யாரென
புரியவில்லை...

எழுதியவர் : ருத்ரா-மறுபதிவு (6-Oct-14, 8:04 am)
பார்வை : 97

மேலே