என் காதலை ஏன் மறந்தாய் ✿`•✿`•✿`•✿`• 0038

என் காதலை ஏன் மறந்தாய்✿`•✿`•✿`•✿`• 0038

நான் அடிக்கடி உன் காதில்
வந்து பேசிய வார்த்தைகள்
உன்னிடம் கேள்வி கேட்குமே!...
நீ என் காதலை மறந்தாயென்று

நான் முத்தமிடும் போது
உன் நெஞ்சினில் சத்தமாக
வைத்து தொலைபேசியை
அணைத்துக் கொண்டாய் - அந்த
ரீங்காரத்தின் ஊடான
மூச்சுக் காற்று உனை வருடுமே
ஏன் அவனை மறந்தாயென்று...

நான் உனக்காக எழுதிய கவிதைகளை
உன் கிளி விரல்களால்
கடதாசியில் கிறுக்கி
வைத்தாய் - அன்
கவிதையெல்லாம் வந்து நிற்குமே!
ஏன் இந்த கவிதைக்கு சொந்தமானவனை
மறந்தாயென்று!

இதய செருகேடு மீட்கும் போதெல்லாம்
உன் மனசு ஞாபகப்படுத்துமே
நாம் பேசிக் கொண்ட வார்த்தைகளை.....
அம்சமாய் நடித்துக் கொள்கின்றாய்
மறந்ததைப் போல...

எழுதியவர் : அ கமல்தாஸ் (6-Oct-14, 3:13 pm)
பார்வை : 136

மேலே