சத்தியமா புரிஞ்சிகங்க

அப்போ பேயுமுன்னு
அண்ணாந்து பாத்திருந்தோம்;
இப்போ போயுமுன்னு
இரவுப்பகல் காத்திருந்தோம்;
ஒன்னும் பேயலையே
ஒரு தூத்த விழலையே...
ஆடி பொறந்துடுச்சி
அடமழை காணலையே
சோறு குடுத்தபூமி
சுடு நெருப்பாகிடுச்சே...
மரத்த வளர்த்தாதான்
மழ வருமிங்குறாங்க
மரத்த வெட்டித்தானே
மாடி ஊடு கட்டுறாங்க...
சோறு குடுத்த நெலம்
கூறுபோட்டு விக்கிறாங்க
அந்நிய நாட்டுகிட்ட
அரிசிவாங்கி திங்கிறாங்க...
பாலைவனத்து பூமி
பணக்கார நாடுமாச்சி
செல்வம் கொழித்தபூமி
மலட்டு மண்ணுமாச்சி...
காடு அழிஞ்சிடுச்சி
கனமழை பொய்த்துடுச்சி
இயற்கையோடு இணையாத
ஒம்மவாழ்வு நரகமாச்சி...
இயந்திரமும் விஞ்ஞானமும்
இயற்க்கையத்தான் கொன்னுடுச்சி
அதனாலே நம்மவாழ்வு
நாசமாகிப் போயிடுச்சி...
தண்ணீருக்கு மூன்றாவது
ஒலகப்போரு வாருமுன்னு
கருத்துக்களும் சொல்லுறாங்க
கவலயிலே தள்ளுறாங்க...
இயற்கையோடு எனஞ்சிபுட்டா
எந்தஒரு நட்டமில்ல
இயற்க்கையத்தான் வளர்த்துபுட்டா
ஒலகஆயுள் கொறைவதில்ல...
சத்தியமா இதபுரிஞ்சி
ஒலகங்களே நடந்துகாங்க
விஞ்ஞான வித்தையெல்லாம்
இப்பொழுதே நிறுத்திடுங்க...
ஒலகமே மரணத்தின்
விளிம்புலதான் நிக்கிதுங்க
இதுக்குமேல என்னசொல்ல
எனக்கு ஒன்னும் தெரியலிங்க...!
பிரியாராம்.