கல்லூரி காலம்

பூக்கள் பூத்து உதிரும்
நேரம் போல் வேகமாய்
நகரும் கல்லூரி காலம்....
விலை கொடுத்தாலும் வாங்க முடியாத
வாத்தியாரின் திட்டுகள்....
ஆயிரம் சண்டை போட்டாலும்
மறக்க முடியாத நண்பனின் சிநேகம்...
ஒன்றுமே இல்லாமல்
பேசும் வீண்பேச்சுகள்...
அதில் நகரும் பொன்னான நேரங்கள்...
ஏன்ன முடியா அர்ரியர்ச்கள்...
அது தான் கெத்து என்று நினைக்கும் மாணவர்கள்....
காதல் மந்திரத்தில் பலபேர்
முட்டி முட்டி சுவரை உடைக்கும் சிலபேர்...
இந்த காலங்கள் முடியும் நேரத்தில்
கண்ணில் கண்ணீருடன் நகரும்
ரோஜா கூட்டங்கள்...

எழுதியவர் : காயத்ரி (6-Oct-14, 6:22 pm)
Tanglish : kalluuri kaalam
பார்வை : 307

மேலே