புன்னகைத்தால் பூமியே சொர்க்கம்

இலைகளை மரங்கள் உதிர்ப்பது எதற்கு ?
பூக்கள் மலரணும் அழகாய் அதற்கு !
கவலையை உதிர்க்க சொல்லனுமா உனக்கு ?
கண்ணா சிரிடா இனி சந்தோசம் நமக்கு...!!

போனது போகட்டும் நல்ல
பொழுதுகள் இருக்கு - பூமழை
பொழியவே முகத்தில் எழில்
புன்னகை இருக்கு....!! - இதை

புரிந்து சிரித்தால் புவனம் சொர்க்கம் - நாம்
புரியாமல் அழுதால் சொர்க்கமும் நரகம்...!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (7-Oct-14, 2:42 am)
பார்வை : 110

மேலே