நல்ல எதிர்காலம்
காசு பணத்தையும் ஆசை சுகத்தையும்
---------நேசித்திடும் மனிதா!-உன்
'ராசி சரியில்லை' சோசியன் சொன்னதும்
---------பூசித்திடும் மடையா!
நேசம் வளர்ப்பதில் பாசம் தளைப்பதில்
---------ஆசியைத் தேடிடுவாய்!-இனி
ரோச முடநீயும் தாசியைப் போலன்றி
---------தேசத்தைக் காத்திடுவாய் !
வேசம் புனைந்திங்கு பேசி மயக்கியே
---------நாசம் விளைத்திடுவார் !-அவர்
வாசம் விலக்கிடு! நேசம் வெறுத்திடு!
---------வீசி எறிந்திடுவாய்!
அல்லல் மறைந்திடும் கல்லும் கரைந்திடும்
---------வெல்லும் வகையறிவாய்!-பின்
நல்ல எதிர்காலம் மெல்ல மலர்ந்திடும்
---------சொல்லி மகிழ்ந்திடுவாய்!