முட்டாள் தமிழன் ------அஹமது அலி------
மனுநீதிச் சோழனின் கதை
மாணவர்களிடம் எடுபடாது
நீதிக்கு உயிர்விட்ட
பாண்டியன் வரலாறு
நீதி போதிக்காது
ஏட்டுச் சுரக்காய்
கறிக்கு மட்டுமல்ல
கதைக்கும் இனி உதவாது..!
0
0
பொதுச் சொத்தை
கொள்ளையடித்த ஊழல்
பொதுவாக போனதால்
நீதி தனிமையில்
தமிழன் எதிரணியில்..!
0
0
லஞ்சம் பெற்று
அளித்தமைந்த அரசாதலால்
ஊழலுக்கெதிரான தீர்ப்பு
தங்களுக்கெதிரான தீர்ப்பென
தமிழகம் குமுறுகிறது!
0
0
நீதிக்குத் தலை வணங்கச் சொன்ன
தலைவனின் தொண்டரணி
ஊழலுக்கு தலை வணங்கி
கூன் விழுந்ததே மிச்சம்...!
0
0
நெற்றிக் கண் திறப்பினும்
குற்றம் குற்றமே என
பக்தி புராணம் படிக்கிறான்
நாடறிந்த குற்றத்திற்கு
கண்ணீரை கடலாய் வடிக்கிறான்.!
0
0
தமிழினம் அழிந்த போது
குறட்டை விட்டு தூங்கியவன்
தனிமனித பற்றுக்காக
உருண்டு புரண்டு துடிக்கிறான்..!
0
0
நிரபராதி என்றால்
நீதியை நேர்மையாய் வெல்
வன்முறையால் கொல்லாதே..!
0
0
தமிழா..!
அம்மா பாசத்தில்
நீ தன்னிகரற்றவன் தான்
நாளை அப்பாவுக்கும்
அண்ணனுக்கும் அக்காவுக்கும்
இதே பாசத்தை காட்டு.!
0
0
ஊழலுக்கு பச்சைக் கொடி காட்டு
நீ முட்டாள் என்று
உலகுக்கு எடுத்துக் காட்டு..!