ஆணின் அன்பு
என் இதயத்தில் இடி விழுந்த போதிலும்
என் மனம் தேடிய அந்த இனிய நாட்கள்
என் இமைகளை இறைவன் மறைத்த போதிலும்
என் இனியவனே நீ என்னை விரும்பிய நாட்கள்
என் உள்ளத்தை களவாடிய கள்வனே
உன்னை கரம் பிடிக்க நான் காத்திருந்த நாட்கள்
என்னை விட்டு நீ பிரிந்த போதிலும்
என்றும் என்னுள் நீ
என்னை கண்ட உன் கண்கள்
இன்று உன்னை காண்கிறது
உன் உடலை விட்டு உயிர் பிரிந்த போதிலும்
இன்றும் வாழ்கிறாய் எனக்காக
என் இமைகளில்