என்னைத் தேடி

பூமி குளிர்ந்திடவே வந்தாள்-அந்தப்
புதுப் புனல் என் அகம்தனில் புகுந்தாள்!
தாமரை மலரெனவே -நாளும்
தயங்கிடாது முகம் மலர்வேன் அவளைக் கண்டு
காதல் அணுக்களெல்லாம் -அன்பு ஊசி கொண்டு
என்னுள் செலுத்திவிட்டாள் சிற்றிடையாள்
மேனி பொன்னிறத்தாள் -எந்தன்
மூச்சை தினம் வளர்த்தாள்!
அவள் அன்புக்கோர் அளவில்லை- என்னைக்
கொள்ளை கொண்ட அழகுக்கும் நிகரில்லை!
பளிங்கு முகத்தழகி -அவள்
பக்கம் வர தவமிருந்தேன் ஊணுறக்கம் தனை மறந்து !
பயித்தியமே பிடித்தது போல் -அவள்
பாதையெல்லாம் பின் தொடர்ந்து அலைந்ததுண்டு
பாவி மகள் பிரிந்திட்டாள் - அன்று
தேடுகிறேன் கிடைத்திடுவாள் நம்பிக்கை உண்டு!