யாரிவள்

உனக்கும் எனக்கும் ..!!
******************************


நீ ...!!!
கொஞ்சும் உன்
.......கூரிய விழிகொண்டு
என் உயிரை துளைப்பதில்
........சந்தோஷம்தான்
உனக்கும் / எனக்கும்


மரணிக்க யாசிக்கிறேன்
எமனிடம் அல்ல என்னவளிடம்

.......உன் நகம் கடித்தும் அல்ல
.......உன் விரல் கோர்த்தும் அல்ல
.......உன் கூந்தல் ஒதுக்கியும் அல்ல
.......உன் வயதினை மேய்ந்தும் அல்ல
.......உன் அழகை ஆராய்ந்தும் அல்ல
.......உன் கழுத்தின் கீழ் கண்பதித்தும் அல்ல
.......உன் இடை மறைக்கும் சேலையாயும் அல்ல
.......உன் உடையாய் மாறியும் அல்ல
.......உன் இதழ் கொய்தும் அல்ல
.......உன் தேகம் தீண்டியும் அல்ல

எனில்

...ஈட்டியாய் இறங்கும்
...உன் விழி கொண்டே
நான் மரணிக்க வேண்டுகிறேன்
நிச்சயமாய் நான்
யாசித்ததை தந்து செல் ....!!!!!!


இல்லை
உன் முகவரி மட்டுமேனும்
.....சொல்லிச்செல் போதும்
என்னுயிர் பறித்தவள் நீயென்று
.....நான் உலகிற்க்குச்சொல்வேன்

எழுதியவர் : ஜென்னி (7-Oct-14, 1:27 pm)
பார்வை : 866

மேலே