மனித வாழ்க்கை

அடியும் வலியும் அனுபவ சூத்திரம்
இனிப்பும் கசப்பும் நாவின் நர்த்தனம்
உண்மையும் பொய்யும் சௌகர்ய சாகசம்
வாழ்வும் சாவும் விதியின் பரவசம்
நித்திய நிதர்சனம் நிம்மதி போஜனம்
காசுக்கும் பொருளுக்கும்
மண்ணுக்கும் பொன்னுக்கும் ஏன் பெண்ணுக்குமாய் ஏங்கும் காலந்தள்ளும்
காயம் சுமக்கும்
மனமாய மாய்மாலம்
மனித வாழ்க்கை
என்றால் சரியா???