அம்மா பொண்ணு

என்னின் மறுவடிவே!இதயத் தருமருந்தே
உன்னைத் தொடுகையிலே உள்ளம் நனைவதென்னெ?
சின்னஞ் சிறுகைகள் பண்ணும் கலைநயத்தில்
அன்னை மனம்சிரிக்கும் உன்னை தினம்அணைக்கும்

வரமாகப் பெறத்தானோ இரவுபகல் கருசுமந்தேன்
கரம்வந்து தவழ்நிலவே! சிரமங்கள் மறப்பிப்பாய்!
உறவாக உனைப்பெறவே விரதங்கள் பலவிருந்தேன்
நிறைவாக உருபெற்றாய் வருடங்கள் பொறுத்திருந்தேன்

கனவுகளின் நிசவடிவாய் நினைவில்வரும் அழகுமகள்
மனமுழுதும் உனக்குத்தான் மணக்கும் வென்பனிமலரே
குணம்நிரைந்த குலக்கொழுந்தே தினமுனக்காய் விழித்தெழுவேன்
அணைப்பினிலே நிலைமறந்து அனுதினமும் உனைவளர்ப்பேன் !!

எழுதியவர் : அபி (8-Oct-14, 1:17 pm)
பார்வை : 2382

மேலே